நீர்கொழும்பில் பல வாகனங்களை தீ வைத்து கொளுத்திய நபர் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவின் மூலம் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வருகைதந்து அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்துள்ளமை தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்ளில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய சந்தேக நபரை நேற்று மாலை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...