ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட ஷஹ்ரான் குழுவினர்! பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Aasim in சமூகம்

ஷஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி முகாம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறிய நுவரெலியா பொலிஸார் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் இதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவினர் நுவரெலியாவில் பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பயிற்சிகளைப் பெற்ற காலகட்டத்தில் அவர்களின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

எனினும் நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது நுவரெலியா பொலிஸாருக்கு எதிராக விசேட விசாரணைப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...