பெண் வைத்தியரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி! இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோமரங்கடவல வைத்தியசாலையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர் பெண் வைத்தியர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பழைய மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்காக அப்பகுதியை காண்பிக்குமாறும், பெண் வைத்தியரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெண் வைத்தியர் ஒப்பந்தகாரர் உடன் சென்று அப்பகுதியை காண்பிக்கின்ற போது பெண் வைத்தியரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers

loading...