தற்கொலை குண்டுத்தாரி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

Report Print Kanmani in சமூகம்
284Shares

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு சினமென் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமென் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் பணம் வழங்கியதாக கூறப்படும் எம்.முவ்பாஹில் என்பவர் மேலும் சிலருடன் பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட்டிடமிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றதாக கூறப்படும் எம்.முவ்பாஹில் என்பவர் மேலும் சிலருடன் பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டிருப்பதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு வங்கிகள் பலவற்றின் கணக்கறிக்கைகளை பெற்றுத்தருமாறு பொலிஸார் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குண்டுதாரி வைப்பீடு செய்துள்ள 20 இலட்சம் ரூபாவில் 6 இலட்சம் ரூபாவை இவரது மனைவி பெற்றுக்கொண்டிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.