தம்புளை - ஹபரண வீதியில் திகம்பத்தஹ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் எதிர் திசையில் வந்த வேன் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் பேருந்தின் சாரதிகள் உட்பட காயமடைந்தவர்கள் நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.