பெண்ணொருவரின் தங்க ஆபரணத்தை அறுத்தவர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
76Shares

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் பெண்ணொருவரின் தங்க ஆபரணத்தை அறுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சிவில் பாதுகாப்பு படை வீரர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதவான் டி.தேனபது முன்னிலையில் இன்று சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கந்தளாய், ஐயந்திபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய என்.நாமல் லங்கா திலக, தல்கஸ்வெவ, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எப்.ஐகத் நிலன்த குமார, 35 வயதுடைய வீ.எம். சரத் சமரசிங்க என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் - ஆரியவம்ச மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் மாலையை அறுத்து தப்பிச் சென்ற சம்பவத்துடைய தொடர்பின் பேரிலேயே இந்த மூன்று சிவில் பாதுகாப்பு படை வீரர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.