கஞ்சிபான இம்ரானுக்கு எதிரான வழக்கு! வெளியானது மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
154Shares

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆறாண்டு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

5.3 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி கஞ்சிபான இம்ரான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

துபாயில் தலைமறைவாக இருந்த கஞ்சிபான இம்ரான், அங்கு பிரபல பாதாள உலக தலைவர் மாகந்துரே மதுஷ் நடத்திய விருந்தொன்றில் வைத்து மதுஷ் உட்பட பலருடன் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கஞ்சிபான இம்ரானுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படியான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக்கே இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.