வவுனியாவிலிருந்து யாழ்.நல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை

Report Print Theesan in சமூகம்

யாழ்.நல்லூர் ஆலயத்தை நோக்கி வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா - வேப்பங்குளம், ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக இன்று காலை வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைபாதை யாத்திரை வவுனியாவிலிருந்து நல்லூர் வரையாக உள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த் தினத்தன்று நல்லூர் திருத்தலத்தை இந்நடைபாதை யாத்திரை பக்தர்கள் சென்றடைய உள்ளனர்.

வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பாதையாத்திரையில் கலந்துகொள்ளும் அடியார்கள் தங்களது ஆலயங்களில் தங்கியிருக்கும் தினத்தில் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

Latest Offers