கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
109Shares

கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.

திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உலக வங்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து இலங்கையில் நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் தொடர்பாகவும், அதனை எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பாகவும் இதன்போது தெளிவூட்டப்பட்டது.

இலங்கையில் வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இயங்குகிற 45 உள்ளூராட்சி மன்றங்களுடைய சேவை வழங்கும் திறனை விருத்தி செய்து, அதனூடாக மக்களுக்கு சேவை வழங்கக் கூடிய இயல்பு நிலையை உருவாக்குவதற்காக இந்த செயற்றிட்டம் அமைய பெற உள்ளது.

இந்நிகழ்வில் உலக வங்கியின் செயலணி தலைவி யரிஸா லிங்டோ சொமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பப்ரிசோ, பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சு, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.