மயக்கமுற்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்

Report Print Sujitha Sri in சமூகம்
1523Shares

மயக்கமுற்ற நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தன்சில்வத்த, பூண்டுலோயாவை சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் மயக்கமுற்ற நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.