எழுக தமிழ் நிகழ்விற்கு மக்களை அணி திரட்டும் முகமாக இன்று காலை யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
யாழ். நல்லூர் ஆலய முன்றல் மற்றும் யாழ். பேருந்து தரிப்பிட நிலையங்கள் போன்ற இடங்களிலேயே மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் மக்கள் பேரவையினர், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.