மன்னார் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்

Report Print Ashik in சமூகம்

எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் அன்றைய தினம் நீரிணைப்பு துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் நீர்ப்பட்டியலில் நிலுவைத் தொகையினை செலுத்தி நீர் இணைப்பு துண்டிப்பினை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பாவனையாளர்களின் இடத்திற்கு நீர்த் துண்டிப்பு நடைபெற இருப்பதனால் இது வரை ஒரு மாதத்திற்கு மேல் தங்களின் நீர்ப்பட்டியலில் நிலுவைத்தொகை இருந்தால் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் முழுத்தொகையினையும் செலுத்தி துண்டிப்பினை தவிர்த்து மற்றும் மீள் இணைப்பு தண்டப்பணம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers