தேசிய குத்துச்சண்டை போட்டியில் பல பதக்கங்களை வென்ற வட மாகாணம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்திற்கு பதினொரு பதக்கங்கள் பெற்று வவுனியா வீர, வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர்.

கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விளையாட்டு உள்ளக அரங்கில் 2019 ஓகஸ்ட் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் 11 பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என். எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் நாடு பூராவும் இருந்து 500க்கு மேற்பட்ட வீர,வீராங்களைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது ஏழு தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், மூன்று வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளனர்.

தேசிய ரீதியில் நடைபெற்ற ஒன்பதாவது வூசூ போட்டியில் 'தாவுலு' என்ற சீன தற்காப்புக்கலை போட்டியிலும் வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers