பெண் வைத்தியரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
89Shares

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்கவிடம் முன்னிலைப்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த சந்தேகநபர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட வந்தவர் எனவும், மலசலகூடத்தினை புனரமைப்பதற்காக அவ்விடங்களை கட்டிக்கொண்டிருந்த போது பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.