பண்டாரவளை பகுதியில் ஆலய தேர் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

Report Print Kanmani in சமூகம்
348Shares

பண்டாரவளை- நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியம் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற தேர் உற்சவத்தின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலய தேரை நெலுவ, பதுளை பிரதான பாதைக்கு திருப்பும் போது வேக கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று தேருடன் மோதியுள்ளமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதியில் பயணித்த ஒருவர் மீது தேர் சரிந்து விழுந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அட்டாம்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.