திருமண வீட்டில் கைகலப்பில் ஈடுபட்ட குழு! நால்வர் காயம்

Report Print Mubarak in சமூகம்
129Shares

திருகோணமலையில் திருமண வீடொன்றில் இரண்டு குழுக்களுக்கிடையிலான சண்டையின் போது நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று(23) அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கந்தளாய் அக்போபுர பகுதியில் ஹோட்டலொன்றில் திருமணம் நடைபெற்ற போதே இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.

இதன் போது நால்வர் காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.