முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ள காரணத்தினால் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்குத்தொடுவாய் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ளமையினால் கரையோர பகுதி மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக களப்பு முகத்துவார பகுதிகளில் நீர்நிலை குறைவடைந்துள்ளது.
இதனால் சிறுகடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.