ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ஷர்கள் வீட்டில் திருமணம்!

Report Print Vethu Vethu in சமூகம்
635Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண ஏற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 12ஆம் திகதி வீரக்கெட்டிய மெதமுலனவில் இந்த திருமண வைபவம் இடம்பெற்றவுள்ளது.

பிரபல கோடீஸ்வர வர்த்தகரின் மகளான லிமினி வீரசிங்கச என்பவரே, நாமல் திருமணம் செய்துக்கொள்ளவுள்ள தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த திருமண நிகழ்விற்காக நாடாளுமன்றத்தில் அனைத்து அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமண அழைப்பிதழ்களை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் சந்தித்து நாமல் ராஜபக்ச வழங்கியிருந்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷ வீட்டில் சுபகாரியம் நடைபெறவுள்ள நிலையில், அதுநாட்டு மக்களை கவரும் வகையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.