வவுனியா - செட்டிக்குளத்தில் கோர விபத்து: 9 பேர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா - செட்டிக்குளம், ஆண்டியா புளியாலங்குளம் பகுதியில் வைத்து இவ்விபத்து நேர்ந்துள்ளது.

கொழும்பு - வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, வாகனத்தில் பயணித்த 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers