இலங்கை தமிழரசுக் கட்சியின் குழுவினர் கிளிநொச்சியின் சில பகுதிகளிற்கு நேற்று மாலை நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடைய அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த குழுவினர் கிளிநொச்சி - உழவனூர் மற்றும் தம்பிராசாபுரம் ஆகிய பகுதிகளிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அப்பகுதி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன், அவர்களின் தேவைகள் தொடர்பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி உடனடியாக நிவர்த்தி செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, வள்ளுவர் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், புன்னை நீராவி வட்டாரத்தினுடைய பிரதேச சபையின் உறுப்பினர் கலை வாணி, உப தவிசாளர் காயன், உறுப்பினர்களான ரமேஷ் வீரவாகுதேவர், கட்சியினுடைய புன்னை நீராவி வட்டார அமைப்பாளர் முரளி, கட்சியினுடைய முன்னணி செயற்பாட்டாளர் தீபன், பொது அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.