சிதறிப்போயுள்ள இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம்

Report Print Yathu in சமூகம்

யாழ்.பருத்தித்துறையில் இரு மாணவர்கள் விழிப்பூணர்வு நடைபயணம் ஒன்றை நேற்று முன்னெடுத்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலின் பின்னர் சிதறிப்போயுள்ள இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும், நாட்டின் பாதுகாப்பு வலுவான நிலையில் உள்ளதை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் தமது பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு - புனித சென் மிக்கல் கல்லூரியில் இவ் வருடம் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த விஞ்ஞான பிரிவு சஞ்ஜீவன் மற்றும் கணித பிரிவு ஜோசாந் எனும் மாணவர்களே இந் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களது நடைபயணம் மாத்தறை - தேவேந்திர முனையில் நிறைவு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.