வன்னி மண்ணின் விடுதலைக்காக போராடிய அரசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வன்னி மண்ணின் விடுதலைக்காக போராடிய இறுதி அரசனான பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில், வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, வவுனியா நகரசபை மண்டபத்தில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணியும் பண்ணார வன்னியனின் சிலை நிறுவியவருமான மு.சிற்றம்பலம், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.