பேஸ்புக் விருந்தில் யுவதிகளின் மோசமான செயற்பாடு!

Report Print Vethu Vethu in சமூகம்

இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்தில் இருந்த 8 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக இணைந்த நண்பர்களினால் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 5 இளைஞர்களும் 3 யுவதிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்களிடம் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள், கஞ்சா உட்பட பல ஆபத்தான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.