வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளால் பரிதாபமாக பலியான இளைஞன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கண்டி, நுவரெலியா பிரதான வீதியில் தவலந்தென்ன, கெரண்டி எல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கண்டி நகரிலிருந்து கொத்மலை, புரட்டாசி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் குறித்த பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றில் விழுந்ததனால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, கட்டுகஸ்தோட்டை - ஜம்புகாபிட்டிய பகுதியை சேர்ந்த திலின சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.