காணாமல் போன மகனை தேடித்தருமாறு போராடிய தந்தை மாரடைப்பால் மரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

போர் நடைபெற்ற நேரத்தில் காணாமல் போன தனது மகனை தேடித்தருமாறு கோரி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்கு எதிரில் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வந்த 69 வயதான நபர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு கணுக்கேணி கிராமத்தை சேர்ந்த இவர் போராட்டம் நடத்ததும் கூடாரத்தில் இருக்கும் போது, அவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி அவரது மகனான ரி.வாசியன் என்பவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டுபிடித்து தருமாறு கோரி உயிரிழந்தவர்கள் நீண்டகாலமாக முல்லைத்தீவு அரசாங்கம் அதிபரின் அலுவலகத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.