இரு பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்த தந்தை - பதற வைக்கும் சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

புத்தளத்தில் இரு பிள்ளைகளை நஞ்சு கொடுத்து கொலை செய்த தந்தையொருவர் தானும் தற்கொலை செய்துள்ளார்.

புத்தளம் - உடப்புவ பள்ளிவாசல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட தந்தை 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

13 மற்றும் 7 வயது பிள்ளைகளை நஞ்சூட்டி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம் மாத்திரம் அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.