தௌஹித் ஜமாத் உறுப்பினர் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாவனெல்லை, முருதவெல பகுதியில் வீடொன்றில் வைத்து இன்று அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 59 வயதுடைய இஸ்லாம் சமயத்தை கற்பித்து வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பிரதேசங்களில் நடந்த தொடர் பயங்கரவாத குண்டு தாக்குதல்களுக்கு உதவியமை, முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கைக்கு மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மறுசீரமைப்பில் ஈடுபட்டமை, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.