மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா

Report Print Ashik in சமூகம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்ட திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக நடைபெற்றுள்ளது

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து ஆரம்பமான பவணி மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையை சென்றடைந்தது.

இவ்விழாவிற்கு வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ், செந்தமிழருவி மஹா தர்மகுமாரக் குருக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மொழியியற்துறை விரிவுரையாளர் விஐயபாஸ்கரன், யப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன் மணி சண்முகதாஸ், மன்னார் தமிழ் சங்கம் வண பிதா தமிழ்நேசன் அடிகளார் ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர்.