இலங்கையில் இருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் இந்தியாவில் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்குரிய 5 பேரை இந்திய பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட தேடுதலில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் விசாரணைகளுக்காக கேரளா மற்றும் கோயம்புத்தூர் பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் செயற்படும் லக்சர் - இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் இலங்கை முஸ்லிம் 5 பேரும் ஒரு பாகிஸ்தானியரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு சென்றுள்ளதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் எச்சரித்திருந்தனர்.

இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல்களை நடத்த இந்திய பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.