உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த இளைஞர்களுக்கான சமாதானம் மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆண்டியாகுளியங்குளத்தில் இன்று இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, இளைஞர்கள் மத்தியில் இருந்து தலைமைத்துவத்தினையும், நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானத்தினையும் கட்டியெழுப்புதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.