மாவீரன் பண்டார வன்னியனின் வெற்றிநாள் கொண்டாட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்
57Shares

முல்லைத்தீவு கோட்டையை பண்டார வன்னியன் மன்னன் வெற்றி கொண்ட தினத்தை நினைவு கூறும் முகமாக நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கற்சிலைமடு பகுதியில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வு பண்டார வன்னியன் அறங்காவற் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1801ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். இதன்போது, பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி இடம்பெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப் படைத்தளத்தை நிர்மூலமாக்கியதுடன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆகும்.

எனவே, பண்டார வன்னியனின் உச்சக்கட்ட போர் வெற்றியே அவரது நினைவு நாளாக இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது.