லண்டனில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கல்லாறு மாணவன்

Report Print Navoj in சமூகம்
467Shares

லண்டன் சென். இக்னேசியஸ் கல்லூரியில் முதலாம் தரம் தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்று கணிதப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய கல்லாறு மாணவன் காறுஜன் 2A*, 1A சித்திகளைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

லண்டனில் 2019ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் கடந்த 15ஆம் திகதி வெளியாகியது.

குறித்த மாணவன் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து தற்போது கேம்பிரிட்ஜ், பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம் மாணவன் மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியின் முன்னைநாள் விரிவுரையாளர் எஸ்.ஜெயசீலன் மற்றும் முன்னைநாள் தாதிய உத்தியோகத்தர் சாந்தினி யூலியானா ஆகியோரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.