தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களினால் பாரிஸ் நகரில் இருந்து ஜெனிவா நோக்கி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இந்த நடைபயணம் ஆரம்பமாக உள்ளது.
தமிழ் இனம் பட்ட துன்ப துயரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளை இறுக கட்டி நிரந்தரமானதும் நிம்மதியானதுமான தீர்வை பெற்று தாயக கனவை நனவாக்கும் போராட்டமாக இது அமைய உள்ளது.
அந்தவகையில், இந்நடைபயணம் ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நிறைவடைய உள்ளது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நீங்காத நினைவு நாட்களில் இப்போராட்டம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.