பிள்ளைகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்தது ஏன்? பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

புத்தளத்தில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து தந்தை ஒருவர் தற்கொலை செய்தமை இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடப்புவ பள்ளிவாசல்பாடு பகுதியில் பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 வயதான அஷங்க சனத் என்ற தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 13 வயதான வில்யம் மெஷவ் மற்றும் 7 வயதான எஷோன் மில்ரோத ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.