வெலே சுதா மற்றும் பொட்ட நௌபர் பூசாவுக்கு மாற்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிகடை மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளான வெலே சுதா என்ற சமந்த குமார மற்றும் பொட்ட நௌபர் என்ற மொஹமட் நௌபர் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பூசா சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களை தவிர அண்மையில் ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கஞ்சிபான இம்ரானையும் பூசாவுக்கு மாற்றியுள்ளதாகவும் தலைமையகம் கூறியுள்ளது.

இவர்கள் மூவரும் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் இருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் வழங்கிய அறிக்கைக்கு அமைய மேலும் பல கைதிகள் பூசாவுக்கு மாற்றப்பட உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.