பெண்களாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் கைது!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆண்களையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த முதலாம் திகதி முதல் சில நாட்களுக்கு சலுகையாக அறிவிக்கப்பட்ட இலவச வீசா முறைமையை பயன்படுத்தி இவர்கள் இலங்கைக்குள் நுழைந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலவச வீசா மூலமாக இலங்கை வந்த இவர்கள் பெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் உளவுப் பிரிவு கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்களை இன்று கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊடகப் பேச்சாளர் பி.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.