திருகோணமலை பிரதிப்பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பீ. ஆர். எஸ். ஆர். நாகாமுல்ல இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.