சிவசக்தி ஆனந்தன் அருகில் உட்கார மறுத்த சாந்தி எம்.பி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் அருகில் அமர்வதற்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தின நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கான விருந்தினர்கள் வருகை தந்ததும் விருந்தினர் இருக்கைகளில் அவர்களை அமர்த்தியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அருகில் அமருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிற்கு விழா ஏற்பாட்டுக்குழு இடம் ஒதுக்கியுள்ளனர்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அதில் அமராது மறுப்பு தெரிவித்து, மறு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, மறுபக்கத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அருகில் அவரது கணவரும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.