பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருவதன் காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் , முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் காரணமாக மேல் மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.