மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கி வருகின்றது.

சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல் ஆறு பகுதியாக பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காமப்பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்கள் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகள் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியினால் திருவிழா அறிவிப்பு நிர்வாகத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய உட்பகுதியில் கொடியேற்றப்பட்டு வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு தினமும் பூசைகள் இடம்பெற்றதுடன், ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டு செல்லப்பட்டு பூசைகளும் நடைபெறவுள்ளன.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பு வாவியில் முருகப்பெருமானுக்கு தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

Latest Offers