வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்

Report Print Kanmani in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் கூரை மீது ஏறி இன்று போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு கைதிகளும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருபவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சிறை அதிகாரிகள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.