சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்முனையில் நபரொருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கல்முனையை சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது 41) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பிரதேச விற்பனை முகாமையாளராக கடமையாற்றி வருபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.