தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகவியலாளர் மாநாடு

Report Print Kumar in சமூகம்

இளைஞர்களை வலுவூட்டுவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கள் முன்னெடுத்து வருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் நந்ததிலக தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள சதுட்ட விடுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் நந்ததிலக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இதுவரையில் 14000 இளைஞர் கழகங்கள் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இளைஞர் கழகங்கள் பதியப்பட்டுள்ளன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 40வருடங்களை கடந்துள்ள நிலையில் அன்று அமைச்சராக இதனை ஆரம்பித்தவரே 40வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இன்று பிரதமராக இருக்கின்றார்.அதிலிருந்தே விளங்குகின்றது பிரதமர் இளைஞர்களுக்கு எவ்வாறான இடத்தினை வழங்கியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பல்வேறு பிரிவுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.இதன் கீழ் இளைஞர்கழகம் ஊடாக கிராமத்திற்கு ஒரு கோடி என்னும் சிரமசக்தி வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேபோன்று கிராம மட்டக்களில் இளைஞர்கள் ஊடாக அபிவிருத்திகளை செய்யும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இளைஞர்கள் மீது நம்பிக்கையொன்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒவ்வொரு இளைஞர் கழகத்திற்கும் மூன்று இலட்சம் ரூபா வழங்கியிருந்தார்.

இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் நிதி வீண்விரயம் செய்யப்படுவதில்லை,அது இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பயண்படுகின்றது என்பதை பிரதமரும் அமைச்சர்களும் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு இலங்கையில் 200 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.அவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதேபோன்று மாவட்ட மட்டத்தில் விளையாட்டு வீரர்களை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்றது.

மாவட்ட மட்டத்தில் இருந்து தேசிய ரீதியிலும் வீரர்களை கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை மன்றம் மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers