கிழக்கு கைத்தொழில் கண்காட்சி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களத்தினால் நடத்தப்படும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சி மட்டக்களப்பு - கல்லடி தொழில்துறை திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கைத்தொழில் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கவிதா உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இக்கண்காட்சி இடம்பெற்று வருகிறது.

இதேவேளை 26 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கிழக்கு மாகாண தொழில்துறை திணைக்களத்தின் விஷேட வடிவமைப்பு நிலைய கட்டடத்திற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் கிராமிய தொழில்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers