அழகு ராணி போட்டிக்கு தெரிவான இலங்கை யுவதி

Report Print Steephen Steephen in சமூகம்

இத்தாலியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான அழகு ராணியை தெரிவு செய்யும் இறுதி போட்டிக்கு இலங்கையை சேர்ந்த 20 வயதான சேவ்மி தாருகா பெர்னாண்டோ என்ற யுவதி தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டி இத்தாலியின் வந்தோ மாகாணத்தின் யேசோலோ நகரில் இன்று நடைபெறுகிறது.

இத்தாலியின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த 80 யுவதிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வேந்தோ மாகாணத்தின் பாதோவா மாவட்டத்தின் கம்போசம்பியோரோ கிராமத்தில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருகா பெர்னாண்டோவும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இலக்கம் 67 இன் கீழ் அவர் போட்டியிடுகிறார். இத்தாலியின் பிரதான தொலைக்காட்சியான ராய் 1 மூலம் இந்த நிகழ்ச்சி இன்றிரவு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

இத்தாலியில் வசிக்கும் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்களை கொண்டுள்ளவர்கள், தாம் விரும்பிய போட்டியாளருக்கு வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.