எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் வகையில் வவுனியாவில் சந்திப்பு

Report Print Theesan in சமூகம்

யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் வகையிலான சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புகளுடனான குறித்த சந்திப்பு நேற்றைய தினம் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது தமிழ் மக்கள் பேரவை மற்றும் அதன் அங்கத்துவ கட்சிகளினது ஏற்பாட்டில் நடத்தப்படிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, நகரசபை தலைவர் இ.கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், போர்க்குற்ற விசாரணையை நடத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.