கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்திய யானை! சிதறி ஓடிய மக்கள் - 17 பேர் காயம்

Report Print Vethu Vethu in சமூகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை விகாரையின் வருடாந்த பெரஹரவின் போது வீதி ஊர்வலம் சென்ற யானைகள் இரண்டு திடீரென குழப்பமடைந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரஹரவை பார்க்க வந்த மக்களை நோக்கிய யானை ஓடியமையினால் சிதறி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுபோவில, ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 13 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு 10.40 மணியளவில் இரண்டு யானைகள் குழப்பமடைந்துள்ளன. அதில் ஒரு யானை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் பொது மக்களை நோக்கி ஓடியுள்ளது. இதனால் மக்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.