மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் விபத்து

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மடுகந்தை பகுதியில் இன்று அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெப்பற்றிகொலாவ, யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

நித்திரை கலக்கத்தினால் விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.