திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விபத்து: மூவர் காயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - நொச்சிகுளம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே இவ்விபத்திற்கான காரணம் எனவும், இதன்போது மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை, பிரதான வீதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

அந்தவகையில் இம்மாதம் திருகோணமலையில் 13 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதிகளவிலான விபத்துக்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்றமையினாலேயே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.