அம்பாறை ஊடகவியலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள கற்கை நெறி

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இன்று இக் கற்கை நெறி ஆரம்பமாகியுள்ளது.

இந்த கற்கை நெறியானது அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.எம்.ரிஸ்கான் முகம்மட்டின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட கட்டிடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியலாளர் ஏ.எம்.சகீர் சிலோன், மீடியா போரத்தின் தலைவர் றியாத். ஏ.மஜீத், மாவட்ட தமீழர் ஊடக மையத்தின் தலைவர் ரீ.தர்மேந்திரா சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் எ.எஸ்.எம் முஜாஹீத் நுஜா, ஊடக ஒன்றிய செயலாளர் பைசல் இஸ்மாயில் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதர்வரும் 19ஆம் திகதி வரை இந்த கற்கை நெறி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.